மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை! சேலம் அருகே அதிர்ச்சி

மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை! சேலம் அருகே அதிர்ச்சி
சேலம் அருகே பெற்ற மகளை தந்தை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி அருகே உள்ள வெள்ளக்குண்டதை சேர்ந்தவர் செல்வராஜ். கறி கடை வியாபாரியான அவரின் மகள் பிரதீங்கரா தேவி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று செல்வராஜ், மது அருந்துவிட்டு வந்து, மகளுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அருவாமனையை எடுத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். மேலும் செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.