மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் 2ஆவது முறையாக உயர்வு
இன்று (டிசம்பர் 12) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று (டிசம்பர் 11) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (டிசம்பர் 12) காலை 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மாலை வேளையில் மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இன்று மாலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,330க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கும் கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.