ஹைதராபாத்தில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ... 5 பேர் உடல்கருகி பலி

ஹைதராபாத்தில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ... 5 பேர் உடல்கருகி பலி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 4 மாடிகளைக் கொண்ட பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதரபாத்தின் நம்பள்ளி பகுதியில் உள்ள அந்தக் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கடையின் அடித்தளத்தில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி 2 சிறார்கள், ஒரு மூதாட்டி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.