நாம் தமிழர் சீமானை மிரட்டி வீடியோ; தவெக மாவட்ட செயலாளர் 'லெப்ட்' பாண்டி மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் சீமானை மிரட்டி வீடியோ; தவெக மாவட்ட செயலாளர் 'லெப்ட்' பாண்டி மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) லெப்ட் பாண்டி. சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அடிக்கடி வீடியோக்களை லெப்ட் பாண்டி வெளியிடுவது வழக்கம்‌‌.

இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயையும், தவெக தொண்டர்களை குறித்தும் கட்சி மேடைகளில் விமர்சித்து வந்தார். இந்நிலையில், லெப்ட் பாண்டி சீமானையும், சாட்டை துரைமுருகனையும் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டி விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்கு செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லெப்ட் பாண்டியை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.