நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அதிமுக தேர்தல் அறிக்கையை முன்னாள் எம்பி செளந்தரராஜன் விநியோகித்தார்.
பணகுடி பேரூராட்சிக்குட்பட்ட பாம்பன்குளம், கலந்தபனை, ரோஸ்மியாபுரம் பகுதிகளில் பணகுடி அதிமுக நகரச் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான GT.லாரன்ஸ் தலைமையில் முன்னாள் எம்பியும், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான சௌந்தரராஜன் பொதுமக்களுக்கு அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் முதல் கட்ட ஐந்து தேர்தல் வாக்குறுதிகளான குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய், வீடு இல்லாதவர்களுக்கு விலையில்லா கான்கிரீட் வீடு, ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு ₹25000 மானியத்தில் ஸ்கூட்டர் ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை சௌந்தரராஜன் வழங்கினார். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தொடர்ந்து ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் 125 நாட்களானது 150 நாட்களாகவும் உயர்த்தப்படும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பணகுடி 2வது வார்டு கவுன்சிலர் டேவிட் ராஜன், 7வது வார்டு கவுன்சிலர் மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இளையபெருமாள், பிரேம்குமார், பொன் பாண்டி, பணகுடி நகர அம்மா பேரவை செயலாளர் பாலசுப்ரமணியன், பணகுடி நகர இலக்கிய அணி செயலாளர் ரஜினி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் முத்துக்குட்டி, பணகுடி நகர ஐ.டி. விங் செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.