மதுரை: ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு, இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையுடன் இணைந்து தமிழக காவல்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் மகாலிங்கம் என்பவர் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான உண்மையான குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தற்கொலை செய்த மகாலிங்கம் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.