நாடாளுமன்ற வளாகத்தில் காரில் நாயுடன் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியால் சர்ச்சை

நாடாளுமன்ற வளாகத்தில் காரில் நாயுடன் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியால் சர்ச்சை

நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி. ரேணுகா சவுத்ரி தனது காரில் நாடாளுமன்ற வளாகத்​தில் நுழைந்​தார். அப்​போது காரின் முன் இருக்​கை​யில் இருந்த அவரது உதவி​யாளரின் மடி​யில் ஒரு நாய் இருந்​தது.

இதுகுறித்து பத்​திரி​கை​யாளர்​கள் கேள்வி எழுப்​பிய​போது, ‘‘விலங்​கு​களை எவரும் விரும்​புவ​தில்​லை​யா? வாயில்லா ஜீவன் வாக​னத்​தில் ஏறி விட்​டது. இதில் யாருக்கு என்ன பிரச்​சினை? இது கடிக்​கும் பிராணி​யல்ல. கடிப்​பவை நாடாளு​மன்​றத்​தில் வேறு உள்​ளன. இதற்கு பாது​காப்பு தடைகள் இல்​லை​யே. இருந்​தால் பின்​பற்​றலாம்” என்​றார்.

பிறகு அவர் வேறு சில பத்​திரி​கை​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘‘நான் வரும் வழி​யில் ஒரு ஸ்கூட்​டரும், காரும் மோதிக் கொண்​டன. அங்கு இந்த நாய்க்​குட்டி சுற்​றித் திரிந்​தது. அது சாலை​யில் அடிபடலாம் என கருதி நான் எனது காரில் எடுத்து வந்​தேன். அதை திருப்பி அனுப்பி விட்​டேன். இதைப் பற்றி விவா​திப்​ப​தில் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்​பி​னார்.

இதனிடையே, நாடாளு​மன்​றத்​தில் பரவிய இந்த தகவலை கேட்டு எம்​.பி.க்​கள் பலர் அதிர்ச்சி அடைந்​தனர். ரேணுகா மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என பாஜக எம்​.பி.க்​கள் வலி​யுறுத்​தினர்.

பாஜக மூத்த எம்​.பி. ஜெக​தாம்​பிகா பால் கூறுகை​யில், ‘‘நா​டாளு​மன்ற உறுப்​பினர்​கள் பற்றி அவருக்கு எந்​தக் கவலை​யும் இல்லை போல தெரி​கிறது. இங்கு தனது நாயை கொண்டு வரு​கிறார். இதுகுறித்து கேள்வி எழுப்​பி​னால் நாடே வெட்​கப்​படும் வகை​யில் பதில் அளிக்​கிறார். அவர்​ மீது நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​’’ என்​றார்​.