எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர் அனுமதி

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர் அனுமதி

உடல் நிலை பாதிப்பு காரணமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் கடந்த 10-ம் தேதி இரு முறை உணர்வற்ற நிலைக்கு சென்றார்.

இதையடுத்து உடல் பரிசோதனைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.