புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ மத்திய அரசு உத்தரவு

புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ மத்திய அரசு உத்தரவு

 சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து ராய்ட்​டர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: உலகின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு சந்​தைகளில் ஒன்​றாக இந்​தியா உள்​ளது. இங்கு மட்​டும் 120 கோடி சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். சஞ்சார் சாத்தி செயலியை மத்திய அரசு சைபர் பாதுகாப்புக்காக பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளது. இந்த செயலியை புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றும், இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் பாது​காப்​புக்​காக மத்​திய அரசு பிரத்​தேயக​மாக உரு​வாக்​கி​யுள்ள சஞ்​சார் சாத்தி செயலியை புதிய போன்​களில் நிறு​விய பிறகே விற்​பனைக்கு அனுப்ப வேண்​டும். இதனை முன்​னணி ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் 90 நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசின் உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சஞ்​சார் சாத்தி இந்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் முயற்​சி​யாகும். இது குடிமக்​களுக்கு செல்போன் பாது​காப்பு மற்​றும் விழிப்​புணர்வை மேம்​படுத்த ஒரு வெப் போர்ட்​டல் மற்​றும் செல்போன் செயலியை வழங்​கு​கிறது. இது பயனர்​கள் தொலைந்து போன அல்​லது திருடப்​பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்​க​வும், மோசடிகளை தடுக்​க​வும், அரசு தொடர்​பான பிற குடிமக்​கள் சேவை​களை அணுக​வும் அனு​ம​திக்​கிறது.

மோசடி எதிர்ப்பு செல்போன் செயலியை உரு​வாக்​கு​வது தொடர்​பாக ஆப்​பிள் நிறு​வனம் ஏற்​கெனவே தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணை​யத்​துடன் மோதல் போக்கை கடைபிடித்து வரு​கிறது.

இந்​தநிலை​யில், மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள இந்த புதிய உத்​தரவை சாம்​சங், விவோ, ஓப்​போ, ஷாவ்மி நிறு​வனங்​களு​டன் சேர்ந்து ஆப்​பிளும் பின்​பற்ற வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​பட்​டுள்​ளது.