பிஹாரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தே.ஜ. கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களில் வென்றது. பிஹாரில் 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார்.
புதிய அரசு ஆட்சி அமைத்ததை முன்னிட்டு 5 நாள் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 243 உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் நரேந்திர நாராயண் யாதவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்வு இன்று நடைபெறும்.