ரூ.400 கோடி திருடியதாக தொழிலதிபர் கடத்தல்: நாசிக்கில் 6 பேர் கைது

ரூ.400 கோடி திருடியதாக தொழிலதிபர் கடத்தல்: நாசிக்கில் 6 பேர் கைது

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டத்​தைச் சேர்ந்த சையத் அசார் உள்​ளிட்ட 6 பேர், தங்​களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்​டு​கள் அடங்​கிய ரூ.400 கோடி மதிப்​பிலான கண்​டெய்​னர் இருப்​ப​தாக​வும், அதை வைத்​துக் கொண்டு பணம் அதி​கம் ஈட்ட முடி​யும் என்று கட்​டிட தொழில​திபர் சந்​தீப் பாட்​டீல் என்​பவரிடம் தெரி​வித்​தனர்.

அவரிடம் பணத்தை பெற்​றுக்​கொண்ட 6 பேரும், ரூ.400 கோடி மதிப்​பிலான கண்​டெய்​னரை திருடிய​தாக கூறி பாட்​டீலை கடத்​திச் சென்று அடித்து உதைத்​துள்​ளனர். இதுதொடர்​பான புகாரில் 6 பேரை​யும் நாசிக் போலீ​ஸார்​ கைது செய்​துள்​ளனர்​.