டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் வென்று, அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்று பாகிஸ்தான் படைத்த சாதனையை இந்திய அணி முறியடித்திருந்தது.
டி20 கிரிக்கெட் போட்டியில், வெற்றி இலக்கை 24 பந்துகள் மீதம் வைத்து எட்டிய அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்து இருந்தது. இந்த சாதனை இதுவரை எந்த அணியாலும் முறியடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 28 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து வென்றது. இதன்மூலம் பாகிஸ்தான் சாதனையை இந்திய அணி முறியடித்தது.
அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணிகள் பட்டியல்:
1. இந்திய அணி - 28 பந்துகளை மீதம் வைத்து வெற்றி
2. பாகிஸ்தான் அணி - 24 பந்துகளை மீதம் வைத்து வெற்றி
3. ஆஸ்திரேலியா அணி - 23 பந்துகளை மீதம் வைத்து வெற்றி