ரஞ்சி கோப்பை: சவுராஷ்டிராவிடம் பஞ்சாப் தோல்வி

ரஞ்சி கோப்பை: சவுராஷ்டிராவிடம் பஞ்சாப் தோல்வி

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் சவுராஷ்டிரா - பஞ்சாப் அணி​கள் இடையி​லான ஆட்​டம் ராஜ்கோட்​டில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்னிங்ஸில் சவு​ராஷ்டிரா 172 ரன்​களும், பஞ்​சாப் அணி 139 ரன்​களும் எடுத்​தன. 33 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய சவு​ராஷ்டிரா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்​டத்​தில் 58.5 ஓவர்​களில் 286 ரன்கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரேரக்மன்​கட் 56, ரவீந்​திர ஜடேஜா 46 ரன்​கள் சேர்த்​தனர்.

இதைத் தொடர்ந்து 320 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பஞ்​சாப் அணி 39 ஓவர்​களில் 125 ரன்​களுக்கு சுருண்​டது. கேப்​டன் ஷுப்​மன் கில் 32 பந்​துளை சந்​தித்து 14 ரன்​கள் எடுத்து நடையை கட்​டி​னார். சவு​ராஷ்டிரா அணி தரப்​பில் தர்​மேந்​திரசிங் ஜடேஜா, பார்த் புட் ஆகியோர் தலா 5 விக்கெட்​களை வீழ்த்​தினர். 194 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சவு​ராஷ்டிரா 6 புள்​ளி​களை பெற்​றது.