பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்! 5 பேர் பலி

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்! 5 பேர் பலி

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வடமேற்கு மாகாணமாக கைபர் பக்துன்குவாவில் அமைதிக் குழு உறுப்பினர் நூர் ஆலம் மசூத்தின் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்தோர் நடனமாடிக் கொண்டு இருந்தனர்.

அங்கு புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், 5 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதலில் அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. அல்கொய்தா ஆதரவு பயங்கவாத அமைப்புகளில் ஏதேனும் ஒன்று நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.