ஜெய்ஸ்வால் மருத்துவமனையில் திடீர் அனுமதி
வயிறு அழற்சி பிரச்சினை காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜெய்ஸ்வால் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில், மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ஜெய்ஸ்வால் பங்கேற்றிருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதும், வயிறு அழற்சி நிலவுவதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 2 நாள்களில் சுமார் 2 கிலோ உடல் எடை குறைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.