சதமடித்து கலக்கிய சேவாக் மகன்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
தமிழக அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சதமடித்து கலக்கினார்.
டெல்லியில் யு10 கூச் பெஹார் கோப்பைக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் மோதின.
முதலில் விளையாடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 372 ரன்களை சேர்த்தது. தமிழக வீரர்கள் ஹேம்சுதேசன் 68 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து டெல்லி அணி களமிறங்கியது. விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆர்யவீர் நிலைத்து நின்று ஆடினார். சதமடித்து அசத்திய அவர், ஆட்டமிழக்காமல் 117 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரை போலவே அவரின் மகன் ஆர்யவீரும் விளையாடுவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.