கால் பெரு விரலில் கில் காயம்... 5வது டி20 போட்டியில் விளையாடவில்லை
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில், கால் பெருவிரலில் காயமடைந்ததால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.
லக்னோவில் நேற்று 4வது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சுப்மன் கில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, பெருவிரல் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். 5வது போட்டிக்கு முன்பு காயத்தில் இருந்து கில் மீள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் கில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கில்லுக்கு பதிலாக, சஞ்சு சாம்சன் 5வது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.