விஜய் ஏன் அமைதி காக்கிறார் ? இதன் பின்னணி என்ன ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஜனநாயகன் படம் பொங்கலுக்கு கூட வெளியாகாது என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.அதோடு , ஜனவரி 23-ம் தேதிதான் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் உள்ளது. 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் அடுத்தடுத்து தொடர் விடுமுறை உள்ளது. ஜனநாயகன் சென்சார் பிரச்சனையால் வெளியாகமல் போக தமிழக பாஜகவே காரணம் என்று முதல்வர் ஸ்டாலினே விமர்சிக்கும் நிலையில் , விஜயின் மௌனம் ஆச்சரியப்பட வைக்கிறது .
இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் ஜனநாயகன் படத்திற்காக பலநடிகர், நடிகைகள் ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஏன் நேற்று முதல்வர் ஸ்டாலின் கூட குரல் எழுப்பினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும் குரல் எழுப்பி ஆச்சரியம் அளித்தார்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் எல்லாவற்றையும் திரும்பி தர வேண்டிய நிலை தியேட்டர்களுக்கு ஏற்பட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 500 கோடி முதலீடு செய்து எடுத்த படம் தற்போது மேலும் சில நாட்கள் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கலங்கி போயிருக்கிறது.
ஆனால் படத்தின் நாயகனான விஜய், இன்று வரை பாஜகவிற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல்எழுப்பவே இல்லை.. இவர் ஆரம்பம் முதலே மத்திய அரசை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ குரல் கொடுக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கு கூட குரல் கொடுக்காதது ஏன் என்று ரசிகர்களும், கட்சிகளுமே ஆச்சரியமாக பார்க்கின்றன.