மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு

மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு

தமிழ்​நாடு சர்​வ​தேச சுற்​றுலா முதலீட்​டாளர் மாநாடு மாமல்​லபுரத்​தில் பிப்.2 மற்​றும் 3 ஆகிய தேதிகளில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடை​பெற உள்​ள​தாக, சுற்​றுலாத் துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தெரி​வித்​தார்.

சுற்​றுலாத்​துறை அமைச்​சர் ராஜேந்​திரன், தொழில்​துறை அமைச்​சர் டிஆர்பி ராஜா ஆகியோர் தலை​மைச்​ செயல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு கூட்​டாக பேட்டி அளித்​தனர்.

அப்​போது அமைச்​சர் ராஜேந்​திரன் கூறிய​தாவது: தமிழக சுற்​றுலா துறையை மேம்​படுத்​தும் பொருட்டு சுற்​றுலா துறைக்​கென தனிக்​கொள்​கையை முதல்​வர் உரு​வாக்கி கொடுத்​துள்​ளார்.

மாநிலத்​தில் 300 சுற்​றுலா தலங்​களை மேம்​படுத்த கொள்கை வகுக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக பொருளா​தா​ரத்தை 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக உயர்த்த முதல்​வர் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். அந்த பொருளா​தார வளர்ச்​சி​யில் சுற்​றுலா துறை​யின் வளர்ச்சி 12 சதவீதம் அளவுக்கு இருக்​கும் என்ற நம்​பிக்கை எங்​களுக்கு உள்​ளது.

தற்​போது சுற்​றுலா துறை​யில் முதலீட்​டாளர்​களை கவரும்வகை​யில் தமிழ்​நாடு சர்​வ​தேச சுற்றுலா முதலீட்​டாளர் மாநாட்டை நடத்த முதல்​வர் முடி​வெடுத்​துள்​ளார். இந்த மாநாடு பிப். 2 மற்​றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை அரு​கே​யுள்ள மாமல்​லபுரத்​தில் முதல்​வர் தலை​மை​யில் நடை​பெற உள்​ளது.

இந்த மாநாட்​டில் இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், உலகின் பல்​வேறு நாடு​களில் இருந்​தும் முதலீட்​டாளர்​கள் பங்​கேற்​கின்​றனர். மருத்​துவ சுற்​றுலா, சுற்​றுச்​சூழல் சுற்​றுலா, சாகச சுற்​றுலா என அனைத்து வகை சுற்​றுலாக்​களை​யும் ஒருங்​கிணைக்​கும் வகை​யில் இந்த முதலீட்​டாளர் மாநாடு நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்து அமைச்​சர் டிஆர்பி ராஜா கூறிய​தாவது: இந்​தி​யா​வில் சுற்​றுலா செல்​வோரின் முதல் விருப்ப தேர்​வாக இருப்​பது தமிழகம்​தான். தற்​போது பாரம்​பரிய சுற்​றுலா, கலாச்​சார சுற்​றுலா, ஆன்​மிக சுற்​றுலா போன்​றவற்​றுக்கு மட்​டுமே முக்​கித்​து​வம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது. டிசம்​பர், ஜனவரி என்​றால் இசை​விழா என்ற அளவில்​தான் வெளியே தெரி​கிறது. இதை​யும் தாண்டி ஏராள​மான விஷ​யங்​கள் உள்​ளன.

அவற்​றை​யும் நாம் கொண்​டாட வேண்​டியது அவசி​யம் என்​பது​தான் முதல்​வரின் சிந்​தனை. தற்​போது புதிய முயற்​சி​யாக, சுற்​றுலா மேம்​பாட்​டுக்கு தேவை​யான நிலங்​களை எங்​கள் துறை​யின் சிப்​காட் நிறு​வனம் தேர்வு செய்து வழங்​கும். அதை சுற்​றுலா துறை மேம்​படுத்​தும். இது​வரை இல்​லாத புதிய முயற்சி இது.

இத்​திட்​டத்​தின் கீழ், புதி​தாக 40 இடங்​களை அடை​யாளம் கண்​டுள்​ளோம். தமிழகத்​தில் 1,076 கி.மீ. நீள கடற்​கரை இருக்​கிறது. ஆனால், இந்த நீண்ட கடற்​கரையை சுற்​றுலா மேம்​பாட்​டுக்கு நாம் இன்​னும் முழு​மை​யாக பயன்​படுத்​த​வில்​லை. கடற்​கரை சு்ற்​றுலா திட்​டங்​களை செயல்​படுத்​தி​னால் மீனவர்​களின் பொருளா​தா​ரம் மிகப்​பெரிய அளவில் உயரும் என்று அவர் கூறி​னார்.

முன்​ன​தாக, தமிழ்​நாடு சர்​வ​தேச முதலீட்​டாளர் மாநாட்​டுக்​கான லோகோவை அமைச்​சர்​கள் இரு​வரும் அறி​முகப்​படுத்​தினர். பேட்​டி​யின் போது சுற்​றுலாதுறை செயலர் கே.மணி​வாசன், சுற்​றுலாத் துறை ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா உள்​ளிட்​டோர் உடனிருந்தனர்.