மாமூல் தர மறுத்த பெண்ணை கைது செய்ய வைத்த விவகாரம்: தனிப்படை போலீஸார் 3 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

மாமூல் தர மறுத்த பெண்ணை கைது செய்ய வைத்த விவகாரம்: தனிப்படை போலீஸார் 3 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

கடந்த மாதம் 24-ம் தேதி மயி​லாப்​பூர் பாப​நாசம் சிவன் சாலை​யில் போலீ​ஸார் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அங்கு 20 லிட்​டர் கேனில் சாரா​யத்தை மறைந்து வைத்​திருந்​த​தாக மயி​லாப்​பூர், பிடாரி​யம்மன் கோயில் தெருவை சேர்ந்த வனிதா (36) என்​பவரை கைது செய்​தனர்.

ஆந்​தி​ரா​விலிருந்து சட்ட விரோத​மாக சாரா​யத்தை வாங்கி வந்​து, தண்​ணீர் கேன் போடு​வது​போல மறைத்து விற்​பனை செய்​த​தாக அவர் மீது குற்​றம் ​சாட்​டப்​பட்​டது.

இந்த வழக்​கில் திடீர் திருப்​ப​மாக, மாமூல் கொடுக்க மறுத்​த​தால் மயி​லாப்​பூர் காவல் துணை ஆணை​யரின் தனிப்படையை சேர்ந்த 3 போலீ​ஸார் வனி​தாவை சிக்க வைத்​திருப்​பது தெரிய​வந்​தது. வனிதா மீது ஏற்​கெனவே மது​பாட்​டில்​கள் விற்​பனை செய்​தது தொடர்​பாக வழக்​கு​கள் உள்​ளன.

தற்​போது, அவர் திருந்தி வாழ்​வதுடன், வீடு வீடாக தண்​ணீர் ​கேன் போட்டு வாழ்க்​கையை நடத்தி வரு​கிறார். இந்நிலையில்தான் அவரிடம் தனிப்படை போலீ​ஸார் மாமூல் கேட்​ட​தாக குற்​றம்​ சாட்​டப்​பட்​டது.

இந்த விவ​காரம் தொடர்​பாக உயர் போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். இதில், போலீ​ஸார் மீதான குற்​றச்​சாட்டு உண்மை என தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தனிப்படையைச் சேர்ந்த தலை​மைக் காவலர் வினோத் குமார் (ஜாம்​பஜார் காவல் நிலை​யம்), முதல்​நிலை காவலர் பிரகல​நாதன் (ராயப்​பேட்டை காவல் நிலை​யம்), முதல்​நிலை காவலர் செல்​வகு​மார் (பட்​டினப்​பாக்​கம்) ஆகிய 3 பேர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு மாற்​றப்​பட்​டனர்.