‘தெறி’ ரீரிலீஸை மீண்டும் தள்ளி வைத்தார் தாணு

‘தெறி’ ரீரிலீஸை மீண்டும் தள்ளி வைத்தார் தாணு

விஜய், சமந்தா, எமி ஜாக்​சன்​ நடித்​து 2016-ம்​ ஆண்​டு வெளியான திரைப்​படம்​ ‘தெறி’. கலைப்​புலி எஸ்​. தாணு தயாரித்​த இப்​படம்​ சிறந்​த வெற்​றியைப்​ பெற்​றது. இந்நிலை​யில்​ விஜய்​யின்​ ‘ஜன​நாயகன்​’ படம்​ சென்​சார்​ பிரச்​சினை​யில்​ இருப்​ப​தால்​ ‘தெறி’ படத்​தைப்​ பொங்கலன்று மறு வெளி​யீடு செய்​ய தயாரிப்​பாளர்​ தாணு முடிவு செய்​திருந்​தார்​. இந்​நிலை​யில்​ சில பிரச்சினை​கள்​ காரண​மாக அப்​படத்​தின்​ வெளி​யீட்​டுத்​ தேதி​யை ஜன.23-ம்​ தேதிக்​கு மாற்​று​வ​தாக அறிவித்திருந்தார்​.

அதே தேதி​யில்​ ‘திர​வுப​தி 2’, ‘ஹாட்​ ஸ்பாட்​ 2’ ஆகிய படங்கள்​ வெளி​யாக இருப்​ப​தால்​, ‘தெறி’ வெளி​யீட்​டுத்​ தேதி​யைத்​ தள்​ளி வைக்​க வேண்​டும்​ என்​று கோரிக்​கை வைக்​கப்​பட்​டது. இதையடுத்​து, ‘தெறி’ படத்​தின்​ மறுவெளியீட்​டுத்​ தேதி தள்​ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.