விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
பூரி ஜெகந்நாத் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு, ஸ்லம்டாக்-33 டெம்பிள் ரோடு என பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் 48வது பிறந்த தினத்தையொட்டி, படத்தின் பெயரை வெளியிட்டு எக்ஸ் பக்கத்தில் பூரி ஜெகந்நாத் பதிவிட்டுள்ளார்.
போஸ்டரில் ரத்தக்கரை படிந்த வாளை கையில் வைத்தபடி விஜய் சேதுபதி இருக்கும் காட்சி உள்ளது. இந்த படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும்.