“அம்பேத்கர் வழியில் மதச்சார்பின்மையைப் பேணுவோம்!” - தவெக தலைவர் விஜய்

“அம்பேத்கர் வழியில் மதச்சார்பின்மையைப் பேணுவோம்!” - தவெக தலைவர் விஜய்

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.