இன்று காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ராசிக்காரர் யார் தெரியுமா?
மேஷம்: இன்று உங்களுடைய உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக முடிப்பீர்கள். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால், அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
ரிஷபம்: கனவு கோட்டை கட்டுவதைவிட, நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடமிருந்து நெருக்குதல் இருக்கலாம். எந்த முடிவையும் மேற்கொள்வதற்கு முன்னால் நன்றாக சிந்தித்து செயல்படவும்.
மிதுனம்: எதிர்பாலினத்தவரிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அரசு துறையில் இருப்பவர்கள் மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும், உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனதில் அலை பாய்வதால் கவனச்சிதறல் ஏற்படும். மனதிற்கு பிடித்தவருடன் நேரத்தை செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.
சிம்மம்: உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். எனவே குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று சிறந்த நாளாக இருக்கும்.
கன்னி: குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுவீர்கள். இதன்மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும்.
துலாம்: உங்களது போட்டியாளர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் வகையில் இருப்பீர்கள். உங்கள் வெற்றியை தடுக்கவும், புகழை குறைக்கவும் அவர்கள் விரும்புவதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கு பதிலாக, அவர்களது பின்புலங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்படவும்.
விருச்சிகம்: புதிய வர்த்தக செய்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படும். குறிப்பாக, உங்களது ஆளுமைப் பண்பை அனைவரும் அறிந்து கொள்வார்கள். நண்பர்கள் குறித்து படித்த புத்தகத்தின் தாக்கத்தால் சிலருக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
தனுசு: மனநிலை மற்றும் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.
மகரம்: பல்வேறு வழிகளில் பணவரவு இருக்கும். ஆனால், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்து கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகன ஆசை கைக்கூடும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்கக்கூடும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.
மீனம்: ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்புள்ளது.