இன்றைய ராசிபலன் @ 25 ஜனவரி 2026
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ரிஷபம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
மிதுனம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனக் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கடகம்: விருந்தினர் வருகை உண்டு. குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உடல்நலம் சீராகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: தேவையற்ற விஷயங்கள் மனதை வாட்டும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சிலவேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். சோர்வு நீங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மீனம்: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர வகையில் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் உடன் இருப்பவர்களை கவருவீர். அக்கம் பக்கத்தினருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.