வெள்ளி விலை கிடுகிடு உயர்வு.. கிலோவுக்கு ரூ.10,000 அதிகரிப்பு

தங்கத்திற்கு போட்டியாக தினசரி உயர்ந்து வரும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வெள்ளி விலை கிடுகிடு உயர்வு.. கிலோவுக்கு ரூ.10,000 அதிகரிப்பு

நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பாக இருந்த தங்கம், தற்போது நினைக்கக் கூட முடியாத அளவுக்கு விலை அதிகரித்து வருகிறது.

ஒரு லட்ச ரூபாயை எட்டப்போகுது தங்கம் விலை என்று கவலை அடைந்த நிலையில், தற்போது ஒரு லட்ச ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,675க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்துள்ளது.

அதன் படி ஒரு கிராம் ரூ.244க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.