தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய (டிசம்பர் 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றது.
தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை எகிறி கொண்டே புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770க்கும் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,675க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ.244க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.