ஜனவரி 03, 2026 சனிக்கிழமை : இன்றைய ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே! சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். அலுவலகத்தில் உங்களின் திறமை பாராட்டை கொண்டு வரும். சம்பள உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட இடங்களுக்கு பணி மாறுதலும் வரலாம். வியாபாரத்தில் சிறப்பான வருமானம் வரும். தொழில்துறையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஊற்றெடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். உங்களின் புதிய தொழில்நுட்பம் வியாபாரத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மின்சார, மின்னணு பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் போகவேண்டிய கட்டாயம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு அனுசரணையாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
மிதுன ராசி அன்பர்களே! மிக முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் உங்களின் சிந்தனை திறன் வெளிப்படும். புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும். பார்ட்னர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகங்களில் வேலை சுமை குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட ஏற்பாடு நடக்கும்.
கடக ராசி அன்பர்களே! சற்று மிதமான பலன்கள் நடக்கும் நாள். நீங்கள் நல்லதே நினைத்தாலும் கெட்ட பெயர் வந்து சேரும். தொழில் துறையில் மறைமுக எதிர்ப்புகள் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரம் மந்தமாக நடக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் வரலாம். வேலை இடத்தில் கவனக்குறைவால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வெளியூரில் இருந்து வர வேண்டிய செய்தி தாமதமாகும். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மராசி அன்பர்களே! மனதுக்குப் பிடித்த காரியங்கள் நடக்கும் நாள் இன்று. வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நெருங்கிய உறவினரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வேலை இடத்தில் இருந்த பணிச்சுமை குறையும். மன அழுத்தம் தீரும். மேலதிகாரியின் பாராட்டு ஊக்கத்தை தரும். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். அதிக வருமானத்தை கொண்டு வரும்.
கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் தரும் நாள். வேலை இடத்தில் சில சிரமங்களை எதிர் நோக்கலாம். வேலையை முடிக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். தொழிலில் மந்தமான நிலையே காணப்படும். திடீர் செலவுகள் ஏற்பட்டு சிரமப்படுத்தும். பொருள் வரவு மந்தமாக இருக்கும். எதிர்பார்த்த வேலை நடப்பதில் தாமதமாகும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.
துலாம் ராசி அன்பர்களே! அதிர்ஷ்டமான காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலக வேலைகள் தாமதம் இன்றி நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வ நேர்த்திக்கடன் நிறைவேறும்.
தனுசு ராசி அன்பர்களே! நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பார்ட்னர்களின் உதவியோடு தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் நிலை உருவாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். நண்பரின் ஆதரவு ஒத்தாசையாக இருக்கும்.
மகர ராசி அன்பர்களே! உயர்ந்த பலன்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறையும். தொழில்துறையில் மிகுந்த முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கப்படுத்தும். சம்பள உயர்வு கிடைக்கும். பதவி மாற்றத்திற்கான வாய்ப்பு உண்டாகும். வருமானத்தடை எதுவும் இருக்காது. அவசியமான பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும்.
கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமாக காரியங்கள் நடக்கும் நாள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி எதிர்பார்க்கலாம். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானப் பெருக்கம் அதிகரிக்கும். வேலை இடத்தில் பிரச்சனைகள் குறையும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அரசு வேலைகள் தாமதம் இல்லாமல் நடக்கும். ஆடை ஆபரண யோகம் உண்டாகும்.
மீன ராசி அன்பர்களே! நன்மை தீமை கலந்து செயல்கள் நடக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் சின்ன குறைபாடு ஏற்படலாம். பண விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். வியாபாரம் சற்று மிதமாகவே நடக்கும். தொழில்துறையில் தேவையில்லாமல் அலைச்சல் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய செய்தி தாமதமாகும். அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உறவினர் வருகையால் திடீர் செலவு உண்டாகும்.