உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதியை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் ஜனவரி 6ஆம் தேதி அல்லது அந்த வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.