விடுபட்டவர்கள் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 பெறலாம்!. தமிழக அரசு!
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
நிகழாண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேஷ்டி, சேவை ஆகியவற்றுடன் சோ்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரா்களும், 2-ஆம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்தநிலையில், விடுபட்டவர்களுக்கு விநியோகப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகை பெறாத குடும்பங்கள் நாளை (ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைகளில் ஜன.14ம் தேதி வரை 2.15 கோடி குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசை பெற்றுக்கொண்டனர். விடுபட்ட 7 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3,000 ரொக்கமும், பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழு கரும்பு வழங்கப்படவுள்ளன.
Admin Jan 16, 2026 0 95
Admin Jan 17, 2026 0 69
Admin Jan 18, 2026 0 62
Admin Jan 20, 2026 0 55
Admin Jan 20, 2026 0 53
Admin Oct 24, 2025 0 39
Admin Oct 24, 2025 0 27
Admin Oct 24, 2025 0 48
Admin Oct 24, 2025 0 17