முதல் டி20: தெ.ஆப்பிரிக்க அணி மோசமான சாதனை
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டமிழந்து, தென்னாப்பிரிக்க அணி மோசமான சாதனை படைத்துள்ளது.
அதாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியிடம் கடந்த 2022 ம் ஆண்டில் 87 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆட்டமிழந்திருந்தது. இதுவே தென்னாப்பிரிக்க அணியின் மிகக் குறைந்த ஸ்கோராக இதுவரை கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில், கட்டாக்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியாவிடம் 74 ரன்களில் தெ.ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் தெ.ஆப்பிரிக்க அணி மிகக் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்த போட்டியாக கட்டாக் போட்டி மாறியது.
இந்திய அணி தரப்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் இந்தப் போட்டியில் விக்கெட்டுகளை சாய்த்தனர்.