ஆஸ்திரேலிய தொடர்: இந்திய மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. குறுகிய வடிவிலான தொடர் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி மார்ச் 6 முதல் 9 வரை பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திரமான பிரதிகா ராவல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுடு ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக இடம் பெற்றுள்ளனர்.
இந்திய மகளிர் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ரேணுகா தாக்குர், ஸ்னே ராணா, கிரந்தி கவுடு, வைஷ்ணவி ஷர்மா, சாயாலி சத்காரே.