தபாங் டெல்லியை டை பிரேக்கரில் வீழ்த்தி புனேரி பால்டன் த்ரில் வெற்றி!

தபாங் டெல்லியை டை பிரேக்கரில் வீழ்த்தி புனேரி பால்டன் த்ரில் வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 43-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தபாங் டெல்லிக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி டை பிரேக்கர் சுற்றில் 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

புரோ கபடி லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று டெல்லியில் உள்ள தியாகராஜ் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 79ஆவது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் தபாங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்த இரு அணிகளும் சிறப்பாக செயல்பட, போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் புனேரி பால்டன் அணி 12 ரைட் புள்ளிகள், 4 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் மற்றும் 2 கூடுதல் புள்ளி என 29 புள்ளிகளை கைப்பற்றியது. மறுபக்கம் தபாங் டெல்லி அணியும் சிறப்பாக செயல்பட்டதுடன் 13 ரைட் புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், இரண்டு ஆல் அவுட், ஒரு கூடுதல் புள்ளி என மொத்தமாக 21 புள்ளிகளைக் கைப்பற்றியது. இதன் மூலம் தபாங் டெல்லி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றது.