“தமிழ்நாட்டில் முக்கிய திட்டத்தை செயல்படுத்துகிறோம்..” ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா - ரஷ்யா உறவின் முக்கிய தூணாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில், இலவசமாக 30 நாட்கள் சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு துருவ நட்சத்திரம் போன்றது என்றும் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், தமிழ்நாட்டில் முக்கியத் திட்டத்தை தாங்கள் செயல்படுத்துவதாகவும், கூடங்குளம் மின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னை - விளாடிவோஸ்டாக் இடையே அமையும் வழித்தட திட்டத்தால் இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் புதின் நம்பிக்கை தெரிவித்தார்.