பாஜக தேசிய அரசியலுக்கு.. ஸ்டாலின் வைத்த செக்.. தரமான மூவ்

பாஜக தேசிய அரசியலுக்கு.. ஸ்டாலின் வைத்த செக்.. தரமான மூவ்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 'செம்மொழி இலக்கிய விருது' ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக தேசிய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் தரமான மூவ் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முக்கியமான சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு இந்த தமிழக அரசின் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த விருதுப் பட்டியலில் இந்தி இடம்பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது. வெற்றியாளர்களுக்கு ₹5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மத்திய சாகித்ய அகாடமி விருதுகள் முடக்கப்பட்டு, அவற்றின் பரிசுத் தொகை வெறும் ₹1 லட்சமாக இருக்கும் நிலையில், இம்முயற்சி கவனம் பெறுகிறது. மத்திய அரசு, இத்தகைய அமைப்புகள் நிர்வாகத்தில் தெளிவின்றி உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. இது தமிழக அரசின் புத்திசாலித்தனமான வியூக நகர்வு என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு சில கோடிகள் செலவு மாநிலத்துக்குப் பெரிய சுமையல்ல. இதன்மூலம், இலக்கியத் துறையில் திமுகவின் செல்வாக்கு வலுப்பெறும். மாற்று அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதால், எழுத்தாளர்கள் மத்திய அரசை விமர்சிக்கத் துணிச்சல் பெறுவார்கள்.

முக்கியமாக பாஜகவை விமர்சித்து புத்தகங்களை எழுத இது ஊக்குவிக்கும். பல எழுத்தாளர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை வைப்பார்கள்..வியூக ரீதியாக, திமுக பாஜகவை விட முன்னணியில் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்டாலின் பேச்சு முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

புத்தக வாசிப்பு மூலமாக தமிழக இல்லங்களில் அறிவுத் தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மனித மனம் தனது சிந்தனைகளை பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே புத்தகங்களின் பயன்பாடு. வழக்கில் இருந்த பழமைகளை பொசுக்கி தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம். புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் 4வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது. 

மொழி என்பது பிரிக்கக் கூடிய சுவர் அல்ல.. அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களுக்கு வந்துசேர வேண்டும் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது. தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல, அறிவை பலப்படுத்தி கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். மனிதநேயம், சமூகநீதியை பேசும் எங்கள் திராவிட இயக்க கருத்துக்களை உங்கள் நாடுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது. இனி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பாக செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும். தேசிய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.