கரூர் வழக்கு. சிபிஐ கேட்ட கேள்வி.. விசாரணையில் திக்திக் !
கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நடந்த சிபிஐ விசாரணையில், சம்பவம் நடந்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக சென்றது ஏன்? கீழே பிரச்சனை நடப்பது உங்களுக்கு தெரியாதா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? அவ்வளவு கூட்டம் இருந்த போது அதற்குள் ஏன் வாகனத்தை கொண்டு சென்றீர்கள்? நெரிசல் அபாயம் இருப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? கீழே பிரச்சனை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? போலீஸ் வேண்டாம் என்று சொன்ன போதும்.. அதை மீறி உள்ளே ஏன் சென்றீர்கள்? என்று சிபிஐ இன்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? கீழே ஆம்புலன்ஸ் வரும் சூழல் இருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ஆம்புலன்ஸ் வரும் போதே ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை? நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? என்றெல்லாம் சிபிஐ கேள்விகளை எழுப்பி உள்ளது.
விஜய் அளித்த பதில் கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் அளித்த பதிலில்.. நான் போலீஸ் அளித்த விதிப்படியே நடந்து கொண்டேன். இதில் விதிகளை எங்கும் மீறவில்லை. போலீஸ் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என்று போலீஸ் மீது திருப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? என்று சிபிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
கரூர் வழக்கு சீரியஸ் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது. இதனால் நெருக்கமான சில உறவினர்கள் , நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே கரூர் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது.. என்னை தேவையின்றி கோர்த்துவிட்டு விட்டார்கள் என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.