ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த இந்தியா
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்ததுள்ளதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிளேயிங் லெவன்
நியூசிலாந்து: டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜக்காரி ஃபோல்க்ஸ், ஜெய்டன் லெனாக்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க்
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.