மனைவிக்காக பெற்ற தாயை கொன்ற மகன் 

மனைவிக்காக பெற்ற தாயை கொன்ற மகன் 
ஒடிசாவில் மனைவிக்காக பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயூரபஞ் மாவட்டத்தை சேர்ந்தவர் தபன் சிங். அவரின் மனைவி குருபரி சிங்.
மனைவி அடிக்கடி கர்ப்பம் தரித்து கலைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனது அம்மா ரைமாணி சிங்தான் காரணம், செய்வினை வைக்கிறார் என தபன் நினைத்துள்ளார்.
இந்நிலையில் தாய் மீதான சந்தேகம் அதிகரித்து கோடாரியை எடுத்து வந்து வெட்டி உள்ளார். இதில் ரைமாணி சிங் பரிதாபமாக இறந்தார்.
புகாரின் பேரில் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.