ஸ்க்ராட்ச்சான காரை டச்அப் மேக்கப் செய்து விற்க முயற்சி? போலீசார் தீவிர விசாரணை

ஸ்க்ராட்ச்சான காரை டச்அப் மேக்கப் செய்து விற்க முயற்சி? போலீசார் தீவிர விசாரணை

ஏற்கெனவே பயன்படுத்திய காரை டச்அப் மேக்கப் செய்து வாடிக்கையாளரிடம் விற்க முயன்ற ஷோரூம் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருங்குடியை சேர்ந்த வசந்த் என்பவர் அம்பத்தூர் வாவின் அருகே உள்ள பிரபல கார் ஷோரூமில் 54 லட்சம் மதிப்புள்ள SEALION 7 அதிநவீன வசதி கொண்ட காரை கடந்த 6 ஆம் தேதி முழு பணத்தையும் செலுத்தி பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் ஆர்டிஓ வில் பதிவு செய்துவிட்டு, காரை டெலிவரி தருவதாக ஷோரூம் நிர்வாகம் கெரிவித்திருந்தது. அதன்படி, வசந்த் தன்னுடைய மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் வாகனத்தை எடுத்துச் செல்வதற்காக நேற்று மாலை ஷோருமிற்கு வந்துள்ளார்.

அப்போது, வாகனம் முழுவதும் அழுக்கு படிந்துள்ளது; துடைத்து தருகிறோம் எனக்கூறி, வசந்தின் குடும்பத்தாரை ஷோரும் ஊழியர்கள் காக்க வைத்துள்ளனர். சந்தேகம் அடைந்த வசந்த் வாகனத்தை பரிசோதித்து பார்த்தபோது வாகனத்தின் பல்வேறு இடங்களில் பெயிண்ட் உரசி தேய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து ஷோரூம் மேலாளரிடம் கேட்டபோது சரி செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். மறுநாள் சரி செய்து கொடுப்பதாக கூறி ஷோரூம் மேலாளர் வசந்த் ராஜை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் மறுநாள் சொன்னபடி காரை சரிசெய்து தரவில்லை. இதனால் மேலும் சந்தேகமடைந்த வசந்த், மேற்கொண்டு விசாரணை செய்ததில், காரின் சில பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்ததாக அவர் கூறினார். இதுகுறித்து வசந்த், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.