தவெக துணைத் தலைவராகும் செங்கோட்டையன்?
தவெகவில் செங்கோட்டையன் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர் அக்கட்சியில் சேர்ந்ததும் துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், கோபி தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். இதையடுத்து விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் நாளை அவர் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தத் தகவலை செங்கோட்டையன் மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. எனினும், தவெகவில் அவர் சேருவது உறுதி என்றும், அப்படி சேர்ந்ததும் அவருக்கு துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவிகளில் ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்றும் தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கோட்டையனை கோபி தொகுதியில் தவெக மீண்டும் களம் இறக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.