உக்ரைனில் மேலும் பல பகுதிகளை கைப்பற்றுவோம்... புதின் மிரட்டல்

உக்ரைனில் மேலும் பல பகுதிகளை கைப்பற்றுவோம்... புதின் மிரட்டல்

அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், உக்ரைனில் மேலும் பகுதிகளை தங்கள் நாடு கைப்பற்றும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் சேர முயன்றதையடுத்து தடுக்கும் நோக்கில், அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருவதால், 2 நாடுகள் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கிறது.

இருதரப்பிலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு அமைதி திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். ஆனால் இந்தத் திட்டத்தை உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை.

இதை சுட்டிக்காட்டியுள்ள புதின், "அமைதி ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையை தோற்கடித்தால், உக்ரைனில் மேலும் பல பகுதிகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் தங்கள் நாடு கைப்பற்றும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன், ரஷ்யாவை அழிக்க நினைத்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளும் துணையாக இருந்தனர். ஐரோப்பா கண்டத்தை ஒருநாள் தங்கள்  நாடு தாக்கக்கூடும் என பொய்யான தகவலை பரப்பினர். அதுபோன்ற எண்ணம் ஏதும் எங்கள் நாட்டிடம் இல்லை" என தெரிவித்துள்ளார். 

உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா, டொனஸ்க், கெர்சன் உள்ளிட்ட 4 பெரிய மாகாணங்கள் ஏற்கெனவே ரஷ்ய கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளன. இது ஏறத்தான உக்ரைனின் 20 சதவீத நிலப்பகுதிகள் ஆகும்.