‘ROOT' திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் ரஜினி
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ROOT - Running Out of Time' திரைப்படத்தின் முதல் பார்வையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ROOT – Running Out of Time’ . இந்தபடத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஆங்கில புத்தாண்டு தினமான இன்று, போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் படக்குழுவினர புடைசூழ, வண்ணமயமான இந்த போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் இயக்குனர் சூரிய பிரதாப், நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் மற்றும் தயாரிப்பு குழுவினர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து, ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகளை அவர் நேரில் கண்டுகளித்தார். படத்தின் காட்சிகளை பார்த்து வியந்த அவர் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சூரியபிரதாப் S, அந்த படத்தில் பணியாற்றியதன் மூலம் தான் பெற்ற அனுபவத்துடன், தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் - கிரைம் திரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன