சென்னையில் விடாது பெய்யும் மழை... குளம் போல் காட்சி அளித்த சாலைகள்
சென்னையில் மழை தொடர்வதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும், மழை நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தபடி உள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் ஆறு போல் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதையடுத்து மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.