‘கல்கி 2898 ஏடி’-​யில் தீபிகாவுக்கு பதில் பிரியங்கா சோப்ரா?

‘கல்கி 2898 ஏடி’-​யில் தீபிகாவுக்கு பதில் பிரியங்கா சோப்ரா?

நாக் அஸ்​வின் இயக்​கத்​தில் வெளி​யான திரைப்​படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமி​தாப் பச்​சன், கமல்​ஹாசன், பிர​பாஸ், தீபிகா படு​கோன் உள்​ளிட்ட பலர் நடித்​திருந்​தனர். சந்​தோஷ் நாராயணன் இசையமைத்​தார். படம் வெளி​யாகி ரசிகர்​களிடையே வரவேற்​பைப் பெற்​றது. உலகம் முழு​வதும் ரூ.1000 கோடிக்​கும் அதி​க​மான வசூலை ஈட்டியது. இந்​தப் படத்​தின் இரண்​டாம் பாகம் உரு​வாகி வரு​கிறது.

இதில் கமல்​ஹாசன் கதா​பாத்​திரத்​துக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப் படும் என தகவல் வெளி​யாகி​யுள்​ளது. நடிகை தீபிகா படு​கோன் இப்​படத்​தில் நடிக்க சில நிபந்​தனை​களை விதித்​தார். 8 மணி நேர ஷூட்​டிங், தனது உதவி​யாளர்​களுக்கு சில சலுகைகளைக் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அதற்​குத் தயாரிப்​பாளர் மறுத்​த​தால் அவர் படத்​திலிருந்து வில​கி​னார்.