எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா: பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா: பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் டெல்​லி​யில் தனது அரசு இல்​லத்​தில் நேற்று பொங்​கல் விழா கொண்​டாடி​னார். இதில் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தமிழகத்​தில் பொங்​கல், வட மாநிலங்​களில் மகர சங்​க​ராந்தி மற்​றும் வட கிழக்கு மாநிலங்​களில் போகாளி பிஹு என பல்​வேறு பெயர்​களில் பொங்​கல் கொண்​டாட்​டம் நடை​பெறுகிறது. டெல்​லி​யில் மத்​திய கால்​நடை மற்​றும் செய்தி ஒலிபரப்​புத் துறை இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தனது அரசு வீட்​டில் நேற்று பொங்​கல் பண்​டிகை கொண்​டாடி​னார்.

இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரதமருக்கு சால்வை அணி​வித்து நினை​வுப் பரிசு அளித்து மரி​யாதை செய்​யப்​பட்​டது. பின்​னர் தமிழர் முறைப்​படி சிறப்பு அர்ச்​சனை​கள் செய்த பிறகு, பொங்​கும் பானை​யில் அரிசி மற்​றும் பாலை ஊற்​றி​னார். பின்​னர் அங்கு கூடி​யிருந்​தவர்​கள் மத்​தி​யில் பிரதமர் மோடி பேசி​னார்.

இந்த நிகழ்ச்​சிக்கு டெல்​லி​யில் வாழும் முக்​கி​யத் தமிழர்​கள், தமிழகத்​தைச் சேர்ந்த உயர் அதி​காரி​கள் அழைக்​கப்​பட்​டிருந்​தனர். தமிழ்​நாட்​டில் பாஜக​வுடன் கூட்​டணி வைத்​துள்ள சில அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் மற்​றும் தமிழ்​நாடு பாஜக தலை​வர்​கள் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றனர்.

பிரதமர் மோடியை வரவேற்க பத்ம பட்​டம் பெற்ற நாகஸ்​வரம் மற்​றும் தவில் கலைஞர்​களின் இசை ஒலித்​தது. தமிழகத்​தில் இருந்து வந்​திருந்த கரகாட்​டக் கலைஞர்​களின் நடனங்​களு​டன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

மத்​திய அமைச்​சர்​கள் சிலரும் விழா​வில் கலந்து கொண்​டனர். தமிழ்​நாட்​டில் இருந்து பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, எம்​எல்​ஏ.க்​கள் வானதி னி​வாசன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.