பாக். - அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி

பாக். - அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி

பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன.

பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் கரியன் மாவட்​டத்​தில் பாபி என்ற இடத்​தில் தேசிய தீவிர​வாத தடுப்பு மையம்​(என்​சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவ​மும், பாகிஸ்​தான் ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சியை மேற்​கொள்​கின்​றன.

தீவிர​வாத தடுப்பு அனுபவங்​களை பகிர்ந்து கொள்​வதற்​காக​வும், சிக்​கலான தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் இரு​நாட்டு படை​யினரின் திறனை வலுப்​படுத்​து​வதற்​காக​வும் இந்த கூட்​டுப் பயிற்சி மிக முக்​கிய​மானது. இவ்​வாறு அந்​த அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.