கனடா பிரதமரை சந்திக்க விருப்பமே இல்லை: கோபம் குறையாமல் பேசிய டிரம்ப்
கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், தமது ஆசிய பயணத்தின் 2வது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் வலைதள பதிவில் கூறியதாவது;
சிறந்த, துடிப்பான நாடான மலேசியாவை விட்டு நகர்கிறேன். முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளேன். தாய்லாந்து, கம்போடியா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
போர் வேண்டாம், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அடுத்த பயணம் இப்போது ஜப்பானை நோக்கி என்று பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.