முதல் இந்திய பேரழகி காலமானார்.. மாடல் உலகத்தினர் இரங்கல்

முதல் இந்திய பேரழகி காலமானார்.. மாடல் உலகத்தினர் இரங்கல்

இந்தியாவின் முதல் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மெஹர் கேஸ்டிலினோ காலமானார். அவருக்கு வயது 81.

இந்தியாவில் சிறந்த அழகிய பெண்ணை தேர்வு செய்ய 1964ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1964-ம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில், முதல் மிஸ் இந்தியாவாக மெஹர் கேஸ்டிலினோ தேர்வு செய்யப்பட்டார். 

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நடத்தப்பட்ட முதல் மிஸ் இந்தியா போட்டி இதுவாகும். பழமையில் மூழ்கிப் போயிருந்த இந்தியப் பெண்கள் இடையே இந்தப் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. அழகிப் போட்டி குறித்த ஆர்வத்தையும் இப்போட்டி ஏற்படுத்தியது.

முதல் மிஸ் இந்திய அழகியாக தேர்வான மெஹருக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பின்னர் இந்தியா சார்பில் உலக அழகிப் போட்டியிலும் அவர் பங்கேற்றார். மெஹரின் மறைவுக்கான காரணம் தெரியாத நிலையில், இது பேரிழப்பு என்று மிஸ் இந்தியா அமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மெஹரின் மறைவுக்கு மாடல் உலகத்தினரும், பேசன் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.