பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்

பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்

கேரள தலைமை தேர்​தல் அதி​காரி ரத்​தன் யு கேல்​கர் திரு​வனந்​த​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களுக்கு (பிஎல்ஓ) இலக்​கு​கள் தரு​வது அவர்​களுக்கு அழுத்​தம் தரவேண்​டும் என்ற நோக்​கத்​தில் அல்ல. மாறாக எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) பணி​களை உரிய காலத்​துக்​குள் முடிக்க வேண்​டும் என்​பதே ஆகும். பிஎல்​ஓ.க்​களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.