எங்க முடிய காணோம்.. 2 வருஷம் டோப்பா போட்டு மனைவியை ஏமாற்றிய தில்லாலங்கடி கணவன்.. நொய்டாவில் ஷாக்

எங்க முடிய காணோம்.. 2 வருஷம் டோப்பா போட்டு மனைவியை ஏமாற்றிய தில்லாலங்கடி கணவன்.. நொய்டாவில் ஷாக்

இந்தியாவில் திருமண விவாகரத்து வழக்குகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. புரிதலின்மை, மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த பெண்ணுக்கு அடர்த்தியான முடி கொண்ட கணவர் வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் எதிர்பார்த்தபடியே திருமணமும் நடந்தது. நாளடைவில் தான் அவர் கணவர் சொட்டை தலை என்பதும், டோப்பா பயன்படுத்தி அவரை ஏமாற்றியதும் தெரிந்துள்ளது. ஆத்திரமடைந்த பெண், இந்த மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் லவிகா குப்தா. இவருக்கு சன்யாம் ஜெயின் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சுமார் 2 வருடங்களாகியுள்ள நிலையில், தன் கணவர் குறித்து காவல் நிலையத்தில் பகீர் புகார் அளித்திருக்கிறார்.

சொட்டை தலை மோசடி

பிஸ்ராக் காவல் நிலையத்தில் லவிதா குப்தா அளித்துள்ள புகாரில், "நான் என் திருமணத்திற்காக என் கணவர் சில வாக்குறுதிகள் கொடுத்தார். நான் என் கணவருக்கு அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் அப்படித்தான் கூறினார். ஆனால் அவருக்கு துளியும் முடி இல்லை. சொட்டை தலை என்பது திருமணத்திற்கு பிறகு தான் தெரிந்தது.

அவர் தலைக்கு டோப்பா பயன்படுத்தி என்னை ஏமாற்றிவிட்டார். அது மட்டுமில்லை, கல்வி மற்றும் வருமானம் என்று தன்னைப் பற்றி அவர் சொன்ன அனைத்து தகவல்களும் பொய்யானது. இதனால் நான் மிகுந்த மனவேதனையடைந்தேன். என்னை ஏமாற்றியது தொடர்பாக கணவரிடம் கேட்டேன். அப்போது அவர் என் அந்தரங்க போட்டோக்களை காட்டி பிளாக்மெயில் செய்து அடித்து துன்புறுத்தினார்.

தொடர்ந்து துன்புறுத்தல்

நாங்கள் தாய்லாந்து சென்றபோது, அங்கிருந்து இந்தியாவுக்கு போதை மருந்து கொண்டு வர சொல்லியும் என்னை அடித்தார், இந்த விஷயத்தை நான் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். கணவர் மட்டுமல்ல, அவர் உடன் பிறந்த 4 சகோதரிகளும் என்னை துன்புறுத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சன்யாம் ஜெயின் மற்றும் அவரின் சகோதரிகள் 5 பேர் மீது வரதட்சணை, அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.